அமெரிக்கா செல்ல காத்திருக்கும் ஆப்கானிஷ்தான் மக்கள்..!
2021 ஆம் ஆண்டு அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது இதனையடுத்து தலிபான் இயக்கம் ஆட்சியை கைப்பற்றியது.
இதனையடுத்து அங்கு வாழும் மக்கள் பெரும் கஷ்டத்தை எதிர் நோக்குகின்றனர்.குறிப்பாக பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகள் அதிகளவில் விதிக்கப்பட்டுவருகின்றன.இதன் காரணமாக ஆப்கானிஷ்தானில் இருந்து அமெரிக்காவிற்கு அடைகலம் தேடி பலர் செல்கின்றனர்.இதன் காரணமாக அமெரிக்காவில் குடியேறும் வகையில் சிறப்பு விசாவை பெறுவதற்காக 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண்கள் வெளியில் செல்லுதல் , மூன்றாம் வகுப்புக்குமேல் கல்வி கற்றல், வாகன செலுத்துதல் போன்ற பலவாறா கட்டுப்பாடுகளை தலிபான் இயக்கம் விதித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.