உயர்தரத்தில் சிறந்த பெறு பேறு பெற்ற மலையக மாணவர்கள்..!

மலையக மாணவர்கள் தற்போது அனைத்து துறைகளிலும் தமது திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதற்கு முக்கியகாரணம் மாணவர்களின் உழைப்பும் ஆசிரியர்களின் அர்பணிப்பும் என்று சொல்லலாம்.

நேற்றைய தினம் க.பொ.த உயர்தரப்பரீட்சைகளின் முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தன.இதற்கமை CP/Ganesha Tamil school ல் சாதாரணதரம் பயின்று உயர்தரத்திற்கு வேறு பாடசாலைகளுக்கு சென்று அங்கும் சிறந்த பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருக்கின்றனர்.

இதில் கணித பிரிவில் தோற்றிய தர்மன் 2A ,2B யும்,விஞ்ஞான பிரிவில் தோற்றிய நந்தன் 2A ,2C யும்,லவன் என்ற மாணவன் 3C,S ம், வர்த்தக பிரிவில் தோற்றிய தனிஷ் 3A யும்,B tech பிரிவில் தோற்றிய கிருஷாந்தா 3C,S யும் பெற்றிருககின்றனர்.

ஏனைய மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருக்கின்றமை சிறபம்சமாகும்.இவர்கள் அனைவரும் சிறந்த ஆசியர் பண்முக செயற்பாட்டாளர் RG.கிருஷ்ணா மற்றும் கணேஷா அதிபர், ஆசிரியர்கள் கற்பித்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் மலையகத்தில் ஒரு வைத்தியர்,ஒரு இஞ்சினியர்,பல துறைசார்ந்த அதிகாரிகளின் உருவாக்கத்திற்கு ஏதோ ஒரு வகையில் தாமும் உழைத்திருக்கிறோம் என்ற திருப்தி மிக பெரிய கொடையாகும் என்றும் இன்னும் நீங்கள் சிகரம் தொடுவதை பார்க்க வேண்டும் என்றும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் மலையக மறுமலர்ச்சி ஒன்றியத்தின் தலைவரும் ஆசிரியருமான RG.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

மலையக வரலாற்றில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது கல்வி ஒன்றே. அது அனைவரும் பெரும் பட்சத்தில் நிச்சியமாக எம்மவர்களின் வாழ்விலும் ஒளி வீசும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *