ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு பதிவு..!
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.11 மணியளவில் திலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக ஆப்கானிஸ்தானின் நில அதிர்விற்கான தேசிய நிலையம் தெரிவித்துள்ளது.இந் நிலநடுக்கமானது ஹெரத் மாகாணத்திலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.
இதே வேளை கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற கடுமையான நிலநடுக்கத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இந்த துயரில் இருந்து இன்னும் மீள முடியாமல் இருக்கும் மக்களுக்கு பேரிடியாக இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எனினும் குறித்த நிலநடுக்கத்தினால ஏற்பட்ட சேத விபரம் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.