டெங்கு நோய் பரவும் அபாயம்..!
நாடளாவிய ரீதியில் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பதை அவதானிக்க முடியும் என அதன் பணிப்பாளர் வைத்தியர் நளினா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இலங்கையில் மழையுடனான வானிலை நிலவுவதன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்காக சுற்றுப் புறச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.