தானங்களில் சிறந்த தானம்…!
🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀
உலக உடல் உறுப்பு
தானம் தினம்
சிறப்பு கவிதை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀
தானங்களில்
ஆயிரம் இருந்தாலும்
அன்னதானம் சிறந்தது
அதனிலும் சிறந்தது
உடல் உறுப்பு தானமே…. !!!
உணவு தானம் செய்தால்
இருப்போரின்
பசியை போக்கும்…
உறுப்பு தானம் செய்தால்
இறப்போரின்
எண்ணிக்கையை குறைக்கும்…
காலமெல்லாம்
தானம் செய்ய
காசு இல்லாமல் போனாலும்….
காலமாகும் போது
தானம் செய்ய
கண் இருக்கிறதே….
பூமியில்
கண்ணைப் புதைத்தால்
மண்ணாகுமே!
இன்னொருவர்
முகத்தில் விதைத்தால்
புண்ணியமாகுமே……..!!
உடல் உறுப்பு
செயலிழப்பதால்
ஆண்டுக்கு ஐந்து லட்சம் பேர்…
இறக்கின்றனர்…….
உடல் உறுப்பு தானத்தால்
பத்து சதவீதம் பேர் தான்
உயிர் பெற்று பிறக்கின்றனர்….
மூளைச்சாவடைந்தவரை
காப்பாற்ற
எந்த மூலையிலும்
மருந்து இல்லையே….!!
அவர் உடல் உறுப்புக்களை
தானம் செய்வதில்
எந்த தவறுமில்லையே…. !!
நெருங்கியவரின் மரணம்
நெருப்பாக சுடும் தான்
இருப்பினும்
நிலை தடுமாறாமல்
யோசித்தால்
இன்னொரு உடலுக்கு
நெருப்பு வைப்பதை
தடுக்கலாமே…….!!
உறவுகளின் மரணம்
புதைக்குழியில்
தள்ளியது போலத்தான்….!!!
ஆனாலும்
அறிவோடு செயல்பட்டால்
இன்னொரு உடல்
புதைக்கப்படுவதை
தடுக்கலாமே…….!!
கண்களை மூடி
ஒரு நாள்
நடந்து பார்ப்போம்…..!
கண்ணில்லாதவனின்
கஷ்டம் அறிய……!!
ஆஸ்துமா
இதய நோயாளியோடு
ஒரு நாள்
வாழ்ந்து பார்ப்போம்
அந்த இருவரின்
துன்பம் வேதனை புரிய….. !!
மரணத்தை வெல்ல
யாராலும்
முடியாது என்பார்கள்……
ஆனால்
எங்களால் முடியும் என்று
நிரூபித்துள்ளார்கள்
“உடல் உறுப்புக்களை
தானமாக கொடுத்தவர்கள்…”
தமிழ்நாடு
எதைக் கொடுப்பதில்
கடைசியாக இருந்தாலும்….
உடல் உறுப்புகள்
தானம் கொடுப்பதில்
முதலவதாக இருப்பதை
அறியும் போது
ஆனந்தமாக இருக்கின்றது…
வரும்போது
எதுவும்
கொண்டு வரவில்லை…..
போகும்போது
எதையும் எடுத்துச்
செல்வதில்லை என்று
சொல்வார்கள்…..
இனிமேல்
வரும்போது
உடல்
உறுப்புக்களோடு வந்தோம்
போகும்போது
அதனை கொடுத்து
புண்ணியத்தை
எடுத்துச் செல்கிறோம் என்று
புதியதாகச் சொல்வோம்….. *கவிதை ரசிகன் குமரேசன்*
🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀