போர் நிறுத்த தீர்மானத்தை, வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா நிராகரிப்பு…!
இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது. இதன் காரணமாக பாலஸ்தீனத்தில் 17,700 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இதனையடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் 99 வது பிரிவை பயன் படுத்தி அதன் பொது செயலாளர் அவசர கூட்டத்தை ஒழுங்கு படுத்தியிருந்தார்.
இதில் பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள பாதுகாப்பு சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தீர்மானத்தை அமெரிக்காவானது தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்துள்ளது.
ஹமாஸ் போரளிகளிடம் 100 ற்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் இருப்பதாகவும்,இந்த தீர்மானமானது ஹமாஸ் போராளிகளின் கைகளில் அதிகாரத்தை வழங்கும் என்றும் தெரிவித்து அமெரிக்காவானது இந்த தீரமானத்தை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக போர் நிறுத்த தீர்மானமானது தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் முடிவை இஸ்ரேலானது வரவேற்றுள்ளது.இதனையடுத்து பாலஸ்தீனத்தின் மீதான போரை இஸ்ரேலானது தீவிரப்படுத்தவுள்ளதாக பெஞ்ச மீன் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.