பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை குறைத்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தல்…!
இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தீவிரமாக தாக்குதல் நடாத்திவருகிறது.இந்நிலையில் பாலஸ்தீனத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்கப் சல்லிவன் ,இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் துல்லியமாக குறி வைத்து தாக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்செயற்திட்டமானது எப்போது அமுல படுத்தப்படும் என்பது தெரியவில்லை.
சரமாரியாக இஸ்ரேலானது தாக்குதல் நடாத்திவருவதால் பல நாடுகள் இஸ்ரேலை கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.