இம்ரான் கானுக்கும் அவரது மனைவிக்கும் இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பா…?
பாகிஸ்தானின் முன்னால் பிரதமர் இமரான் கான் மற்றும் தெஹிரிக் ஈ இன்சாம் கட்சியின் துணை தலைவருக்கும் பாகிஸ்தான் நீதி மன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
71 வயதான இம்ரான்கான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவராக செயற்படுகிறார்.இவர் 2018 முதல் 2022 வரையான காலப்பகுதியில் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார்.
இந்நிலையில் அவர் மீது அரசு ரகசியங்களை கசிய விட்ட குற்ற சாட்டில் கடந்த மாதம் இவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து இவர் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இம்ரான் கானின் மனைவி மீதான தோஷகான பரிசுப்பொருள் ஊழல் வழக்கு இன்றைய தினம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது இம்ரான் கானும் அவரது மனைவி புஷ்ரா பிபியும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.இதனையடுத்து இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.இதே வேளை இருவருக்கும் 787 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில மேலும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தொத்தமாக 24 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருத்தல் அங்கு பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.