5 வது முறையாக பதவி ஏற்ற தலைவர்..!
உலகின் சக்தி மிக்க தலைவர்களில் ஒருவராக காணப்படும் ரஷ்ய ஜனாதிபதி 5 வது முறையாக நேற்றைய தினம் ரஷ்யாவின் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.இவர் 6 ஆண்டுகள் தனது பதவியில் இருக்கலாம்.
ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தல் கடந்த மார்ச்மாதம் நடைப்பெற்றது.இதில் 87.29 சதவீதமான வாக்குகள் பெற்று புடின் மீண்டும் வெற்றிப்பெற்றிருந்தார்.இந்நிலையிலேயே பதவியேற்பு நிகழ்வு நேற்றைய தினம் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.