இது போல் படித்திருக்க மாட்டீர்களா..?

அன்னையர்தினம்பற்றி இதுபோன்ற ஒரு கவிதையை படித்திருக்க மாட்டீர்கள் படித்துப் பாருங்கள் கண்களில் கண்ணீர் கசியும்

படைப்பு ; கவிதை ரசிகன் #குமரேசன்

சூரியனுக்கே
முகவரி கொடுப்பது போல்… !
தேனுக்கே
சுவையூட்டுவது போல்… !
மல்லிகைக்கே
மனத்தை சேர்ப்பதுபோல்….!
கடலிடமே ஆழத்தை பற்றி
பேசுவது போல்….!
அன்னைக்கே
தினம் கொண்டாடுகிறோம்…

தினம் தினம்
கொண்டாட வேண்டிய
அன்னையை
ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடுகிறோம்… !

அன்னைக்கு….
கவிதைகள்
ஆதரவு அளித்தது போல்
பெற்றெடுத்த பிள்ளைகள்
ஆதரவளித்திருந்தால்…..
முதியோர் இல்லங்களும்
பெற்றோர் காப்பங்களும்
தோன்றியிருக்குமா…?

உதிரத்தை
பாலாக ஊட்டியவலுக்கு
ஒருவேளை
கஞ்சி ஊத்த
முடியாமல் போய்விட்டதே
இதயம் என்ன இரும்பா ?
மனம் என்ன கல்லா ?

யாரென்றே
தெரியாதது போல்
தெருவீதியில்
அநாதையாய்
விட்டுவிட்டுப் போகிறார்களே !
எங்கே
அழியுங்கள் பார்க்கலாம்
தொப்புள் கொடியின்
அடையாளத்தை…?

வயிற்றையே ! அறையாக்கி
வளர்த்தெடுத்த அன்னைக்கு
வீட்டில் ஒரு அறை
இல்லாமல் போய்விட்டதே….!!

வயிற்றில்
மடியில்
தோளில்
மார்பில்
இடுப்பில்
மனதில்
சுமை என்று
ஒருநாளும்
நினைக்காமல்
தூக்கி வளர்த்த
தாயைத் தான்…..
ஒவ்வொரு நாளும்
சுமை என்று
நினைக்கிறார்களே…!

அவள்
தூங்கிய
நாட்களைவிட
பிள்ளைகளுக்காக
விழித்திருந்த
நாட்கள்தான் அதிகமடா…

அவள்
உண்டு மகிழ்ந்ததை விட
பிள்ளைகள்
உண்பதைக் கண்டு
மகிழ்ந்து தான் மிகுதியடா…!

தனக்காக அழுத
நாட்களை விட
பிள்ளைகளுக்காக
அழுத நாட்களே அதிகமடா…!

அகிலமே !
கெட்டவன் என்று
சொன்னாலும்…..
தாயின் அன்பில்
அணுவளவும்
பிள்ளை மீது
அன்பு குறைந்தது உண்டா?

தன்னை
அநாதை என்று
ஆசிரமத்தில் விட்டாலும்…
பார்க்க முடியவில்லை என்று
முதியோர் காப்பகத்தில்
சேர்த்தாலும்….
எந்த தாயாவது
பிள்ளைகளை
சபித்தது உண்டா…..?

பிள்ளைகள்
நடப்பதற்காக
நடவண்டியாய்….
உறங்கும்போது
தாலாட்டாய்…
தவளும் போது தரையாய்…
குளிக்கும் போது
பணிப்பெண்ணாய்….
பேசும்போது
பயிற்சியாளராய்….
விளையாடும்போது
விளையாட்டு பொம்மையாய்….
படிக்கும்போது
ஆசிரியராய்….
சோகத்தின் போது
தோழியாய்…
சுமையின் போது
தூணாய் இருந்த அனைக்கு. …
பிள்ளைகள்
கடைசி காலத்தில்
துணையாகக் கூட இருக்க
மனம் இல்லாமல்
போய்விட்டதே…..!

வயதானத் தாயை
மலத்தைப் போல்
அறுவெறுருப்பாக பார்க்கின்ற பிள்ளைகளே…..!
நீ குழந்தையாக
இருக்கும் போது
உன் மலத்தை
முகம் கூட சுளிக்காமல் அப்புறப்படுத்தியவள் என்பதை
நீ அறிவாயா…?

முடியாத காலத்தில்
படுக்கையில்
ஒரு முறையேனும்
சிறுநீர் கழித்து விட்டால்….
சீற்றத்தோடு
முப்பது நிமிடம் திட்டும்
பிள்ளைகளே…!
உன் குழந்தை பருவத்தில்
உன் தாயின்
மடியிலேயே நீ
சிறுநீர் கழித்தாலும்….
“என் செல்லம்
சிறுநீர் வந்திருச்சா? “என்று
உச்சி முகர்ந்து
முத்தம் கொடுப்பதோடு
மட்டுமல்லாமல்…..
அந்த ஈரத்தோடே
நாளெல்லாம் இருப்பாளே!
அதை என்றாவது
நீ நினைத்துப்
பார்த்திருக்கிறாயா….?

தான்
மழையில்
நனைந்தாலும்
வெயிலில்
காய்ந்தாலும்
தன்பிள்ளை
நனையக் கூடாத
காயக் கூடாதென்று
முந்தானையில் மூடி
பாதுகாப்பாக
உன்னை வீடுவரை
கூட்டி வருவாளே…..
அதை உன்னால்
எப்படி மறக்க முடிந்தது…?
அவளை எப்படி
உன்னால்
வெறுக்க முடிந்தது….?

அன்னையர் தினத்தைப் போல்
இனியாவது
அன்னையையும்
கொண்டாடுவோம்…..!
அன்னைக்காக
எழுதிய கவிதையை
தவறாமல் வாசிப்பது போல்
அன்னையையும் தவறாமல்
நேசிப்போம்……! ♥அன்னையராயிருக்கும் அனைவருக்கும் எனது அன்னையர் தின நல்வாழ்த்துகள்♥ கவிதை ரசிகன் குமரேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *