இயற்கையே இறைவன்..!

🙏❤️🙏 காலக் கடவுள் 🙏❤️🙏


சக்கரம் சுழலுதடா
காலச் சக்கரம் சுழலுதடா
கீழிருந்து மேலாக …
மேலிருந்து கீழாக …
எல்லாம் அதிலே மாறுதடா

காலச் சக்கரம் சுழலுதடா …
நீதியைக் கொன்று – தன்
போக்கிலே சென்று
உயர்ந்து நின்றவர்க்கும்
காலம் ஒரு நாள் பாடம்
புகட்டிவிடும் …
பெரும் பள்ளத்தில் தள்ளிவிடும் …

நீதியைக் காத்து
வாழும் பூமியை நேசித்து …
இயற்கையை போற்று …
இங்கே யார் யார்க்கும்
கடவுளின் உருவம் …
அன்பும் கருணையுமே …

வெறும் போலி
வேடங்களில்
கடவுள் தோன்றுவது
இல்லை …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *