இடைகால அரசு இன்று ஸ்தாபிக்கப்படுகிறதா..?
பங்களதேஸில் நடத்தப்பட்ட போராட்டத்தில் 469 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரு நாட்களில் 400 ற்கும் அதிகமான பொலிஸ் நிலையங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ள நிலையில் 50 பொலிஸார் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பங்ளதேஸத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில் இடைகால அரசாங்கம் ஸ்தாபிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முஹமது யூனுஸ் தலைமையிலான இடைகால அரசாங்கம் இன்றைய தினம் ஸ்தாபிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை இடைகால அரசின் ஆலோசனை குழுவில் 15பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் இடைகால அரசின் தலைவர் முஹமது யூனுஸிற்கு ஆயுத படைகள் அனைத்தும் ஆதரவை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
