தோல்வியில் இருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பதே முக்கியம்-ரோயித் ஷர்மா.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக ரோயித் ஷர்மா கருத்து தெரிவித்து இருந்தார்.
“இத்தொடரில் ஸ்பின்னர்களுக்கு எதிராக எங்களது வீரர்கள் சிரமத்தை எதிர்நோக்கினர் என்று தெரியவில்லை.எனினும் விளையாடும் போது ஒவ்வொருவரும் கவனமெடுக்க வேண்டும்.இந்தியாவிற்காக விளையாடும் போது எப்போதும் மன நிறைவடையாது.அதிலும் கேப்டனாக அதற்கு வாய்பே இல்லை.மேலும் சிறப்பாக விளையாடிய இலங்கை அணியை பாராட்ட வேண்டும்.எங்களை விட இந்த தொடரில் இலங்கையணியினர் சிறப்பாக விளையாடினர்.
நாங்கள் சூழலுக்கு தகுந்தாற் போல் விளையாடினோம்.அதனால் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டும் ,சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டும் இருந்தது.இருப்பினும் நாங்கள் முன்னேற வேண்டிய விடயங்கள் உள்ளன.இந்த தொடரின் மூலம் நிறைய விடயங்கள் கற்றுக்கொண்டோம்.இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வியால் உலகம் முடிந்து விடாது.அதிலிருந்து நாம் எப்படி மீண்டு வருகிறோம் என்பதே முக்கியம்”. என்று தெரிவித்திருந்தார்.

27ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி இலங்கையிடம் ஓர் நாள் கிரிக்கெட் தொடரை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
