செய்திகள்

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை..!

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஜப்பானின் மியாசாகி,கொச்சி,ஒய்டா,ககோஷிமா,எகிம் ஆகிய பகுதிகளின் கரையோரப் பகுதிகளுக்கு குறித்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இரு முறை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக குறித்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தெற்கு தீவான கியூஷி பகுதியில் இன்று  4.42 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ஜப்பானின் நிச்சினனுக்கு வடகிழக்கே 20கி.மீ தொலைவில் 25 கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இது ரிச்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *