அவுஸ்திரேயே இந்திய போட்டியில் யார் வெல்வது..?

இந்திய அணியானது எதிர்வரும் நவமபர் மாதம் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்தொடரில் விளையாடவுள்ளது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் நவம்பர் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. அவுஸ்திரேலியாவில் நடந்த போட்டிகளில் 2018/2019,2020/2021 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி வெற்றிவாகை சூடியது.

இந்த வெற்றிகளுக்கு பிறகு எதிர் வரும் நவம்பர் மாதம் தான் அவுஸ்திரேயே மண்ணில் வைத்து இந்திய அணி அவுஸ்திரேலியாவை எதிர்த்து ஆடுகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெறுமா என இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.இதே வேளை 2 வது டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக இடம் பெறவுள்ளது. அதன் போது அதிக குளிர் காணப்படுவதால் அவுஸ்திரேயே அணி யினரால் சிறப்பாக விளையாட முடியாது என மெத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார்.இந்த பகல் இரவு போட்டி ஹெடிலைடில் நடைப்பெற வுள்ளது.

இதே வேளை கடந்த முறை அவுஸ்திரேலிய அணி அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் நோக்குடன் இம்முறை மிக சிறப்பாக விளையாடும் என பல முறை அவுஸ்திரேலிய அணிக்கு கிண்ணத்தை பெற்று கொடுத்த முன்னால் தலைவர் ரிக்கி பொண்டிங் மற்றும் எடம் கில்கிரிஸ்ட் தெரிவித்துள்ளனர்.

2020/2021 ஆண்டில் ஹெடிலைடில் நடைப்பெற்ற போட்டியில் 36 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இந்திய அணிக்கு இழக்க செய்து அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாக இருப்பினும் நவம்பர் மாதம் சுவாரஸ்யமான போட்டியை கண்டு மகிழ ரசிகர்கள் ஆவலோடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *