காஸா குழந்தைகளுக்கு போலியோ வழங்க நடவடிக்கை..!
காஸா பகுதியில் 6 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி வழங்கப்பட்டுவருகிறது.இதற்கமைய 150 நிலையங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவ பணியாளர்களால் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார தாபனம்,யுனிசெப்,பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம்,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ,இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.இதற்கான நிதியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு உலக சுகாதார தாபனம்,யுனிசெப் கோரிய மனிதபிமான நடவடிக்கைகளுக்கு இணைவாக இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
