இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் இராமநாதன்
அர்ச்சுனாவுக்குப்   கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுளா ரத்நாயக்கவினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் ஊடாக இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு – பேஸ்லைன் வீதியில்
கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம்
திகதி ஏற்பட்ட விபத்து வழக்கின் தொடர்ச்சியாக நீதவானால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


வழக்கு விசாரணைகளில் முன்னிலையாவதை தவிர்த்து வந்த நிலையில் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

இருப்பினும் புதிதாக நாடாளுமன்றம் செல்வோருக்கான செயலமர்வுகளில் பங்குபற்றவேண்டியதன் கட்டாயநிலைபற்றி அர்ச்சுனா தனது பேஸ்புக் தளத்தில் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *