காற்றழுத்த தாழ்வானது வலுவடைந்து சூறாவளியாக மாறும்.

திருகோணமழைக்கு வடகிழக்கே 100 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வானது இலங்கையின் கிழக்குக் கரையை நெருங்கி,வட-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து மேலும் வலுவடைந்து ஒரு சூறாவளி புயலாக மாறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன்,
வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் மிக கனமழை, பலத்த காற்று வீசக்கூடும்.
வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய இடங்களிலும் மழை பெய்யும்.
வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, கேகாலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (60-70) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் பிற பகுதிகளில் மணிக்கு சுமார் (40-50) கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை,

குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *