தொடரும் சீரற்ற வானிலையால் இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர்  பேர் உயிரிழப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

21 மாவட்டங்களையும் நோக்கும்போது  மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர்  பாதிக்கப்பட்டுள்ளதாக  மேலும்  தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் 82 வீடுகள் முழுமையாகவும் 1,465 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதிலும் 267 பாதுகாப்பு இடங்களில் மக்கள் பாதுகாப்புக்காக
தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும்  அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவிக்கிறது.


குறித்த சீரற்ற காலநிலை தொடரும் பட்சத்தில் மேலும் மக்கள் பாதிக்கப்படும் சூழல் அதிகரிக்கும் எனவும் எதிர்வுகூறப்படுகிறது.
இதனால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *