இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கொண்டுவரப்பட்ட பிடியாணை ரத்து!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சட்டத்தரணி ஊடாக நவம்பர் 28ம் திகதி  நீதிமன்றில் முன்னிலையான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – பேஸ்லைன் வீதியில் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம்  திகதி காருடன் மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பாக, அர்ச்சுனா அவர்களுக்கு  இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *