செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் அமைச்சர் கலில் ஹகின் உயிரிழப்பு..!

ஆப்கானிஸ்தானில் இடம் பெற்ற தற்கொலை தாக்குதலில் அகதிகள் விவகாரத்துறை அமைச்சர் கலில் ஹகின்உட்பட மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமைச்சர் கலில் வழமையான பணியில் ஈடுப்பட்டிருந்த வேளையில் உள்நுளைந்த நபரொருவர் உடம்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்க செய்துள்ளார்.இதன் போதே அமைச்சர் உயிரிழந்துள்ளார்.மேலும் பணியில் அமர்ந்திருந்த ஊழியர்களும் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலை யார் மேற்கொண்டார்கள் என்பது தொடர்பான எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இந்த சம்பந்தம் தொடர்பான மேலதிக விசாரணை நடைப்பெற்றுவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *