சந்திரிகா – மைத்திரிபால கொழும்பில் விசேட சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமார துங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து இவர்கள் கலந்துரையாடி உள்ளனர். இச்சந்திப்புக் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாவது:
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா மற்றும் மைத்திரி ஆகியோருக்கிடையினலான சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நலன் குறித்து
ஆராயப்பட்டுள்ளது.கட்சியின் எதிர்கால அரசியல், கட்சிக்கு எதிராக எழுந்துள்ள சட்டச் சிக்கல்கள் மற்றும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் கட்சியை வலுவுள்ளதாக மாற்றுதல் மேலும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
முரண்பாடுகளை முடித்து வைக்க சகலரையும் ஓரணியில் இணைப்பதற்கும் இச்சந்திப்பில் யோசிக்கப்பட்டது.