குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

23 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கஞ்சாவுடன் கலந்த 01 கிலோகிராம் 908 கிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நபர் பாங்கொக்கிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் இவர் 73 வயதான இந்திய பிரஜை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குஷ் ரக போதைப்பொருளை ஒரு சிறிய பிளாஸ்ரிக் பையில் கவனமாகப் பொதி செய்து இனிப்புப் பொதிகளுக்கு இடையில் மறைத்து வைத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.