பதிவுகள்

திசைகாட்டி நோக்கி செலுத்தும் வீரம்..!

கப்பல்

கடலின் முதுகில் எழுந்த கலம்

பாய்மரம் பட்டை பரப்பி, மீகாமன்

திசைகாட்டி நோக்கி செலுத்தும் வீரம்!

நாவாய் ஓசை நகரும் கரையில்

பூம்புகார் துறையில் பொருள்மழை பொழியும்

சங்ககால வணிகரின் செம்புலப் பயணம்

உலகெலாம் தமிழின் உயர்வை பரப்பும்

அலைகளின் முதுகில் ஆண்மை காட்டியே

நங்கூரம் பதித்து நலமாய் நிறுத்தி

பகைவர் நாடு பணிந்தது கண்டோம்

சுழிநீர் தாண்டிய செம்பொன் கலங்கள்

முத்தும் மிளகும் மொழியும் ஏற்றியே

தொல்காப்பியம் காட்டும் முந்நீர் வழக்கம்

தோணியில் தொடங்கி துருக்கி வரை பாய்ந்தோம்

இன்றும் வரலாற்றில் இலக்கியமாய் மிளிர்ந்தோம்

கவிஞர் இரா.வசந்தி ஆசிரியர் சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *