சார் டம் யாத்திரை உயர் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தப்பட்டது!
உத்தர்காண்ட் அரசு, வழக்கமாக நடாத்தப்படும் சார் டம் யாத்திரையை இவ்வருடமும் ஜூலையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தனது அதிகாரங்களைக் கோரியிருந்தது. அத்திட்டங்கள் இந்தச் சமயத்தில் மேலும் மோசமான கொரோனாத் தொற்று நிலைமையை உண்டாக்குமென்று குறிப்பிட்ட உயர் நீதிமன்றம் அதை நிறுத்தும்படி கேட்டிருந்தது.
உயர் நீதிமன்றத்தின் அறிக்கை விடப்பட்டதை அடுத்து மீண்டும் உத்தர்காண்ட் அரசு ஜூலை முதலாம் திகதி முதல் அந்த யாத்திரைக்குப் போக விரும்புகிறவர்களைப் பதியும்படி கேட்டிருந்தது அதில் பங்குபற்றுகிறவர்கள் தமக்குக் கொவிட் 19 தொற்று இல்லை என்று காட்டும் 72 மணித்தியாலத்துக்குள் எடுத்த சான்றிதழைக் காட்டவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.
உயர் நீதிமன்றமோ தனது உத்தரவில் அரசு ஏற்படுத்தியிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியானவை அல்ல என்று குறிப்பிட்டு அந்த தலங்களில் நடாத்தப்படும் பூசைகளையும், மற்றும் முக்கிய விடயங்களையும் நேரடி ஒளிபரப்புச் செய்து பலருக்கும் எட்டும்படி செய்யும்படி உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து உத்தர்காண்ட் அரசு யாத்திரையை நடத்தும் திட்டத்தை நிறுத்தியிருப்பதாக அறிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்