போராட்டம் நடத்தும் விவசாயிகள் டெல்லியின் முக்கிய பிராந்தியங்களுக்குள் நுழைய முடியாதபடி கடுமையான எல்லைகள் நிறுவப்படுகின்றன.
அரசு இந்தியாவின் விவசாயம் சம்பந்தமாகக் கொண்டுவந்த மூன்று சட்டங்களையும் வாபஸ் வாங்கச்சொல்லிக் கடந்த இரண்டு மாதமாக இந்தியாவின் தலைநகரில் தமது போராட்டங்களை நடத்திவருகிறார்கள் விவசாயிகள். பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர் பிரதேஷ் போன்ற மாநில விவசாயிகளே இவர்களில் பெரும்பான்மையானோர்.
போராட்டம் அதிகரிக்கும் சமயங்களில் ஆங்காங்கே தடுப்புக்களை போட்டுப் போராட்டம் நடத்துகிறவர்கள் பொது மக்களுக்கு இடைஞ்சலாகாமல் பொலீசார் தடுத்து வந்தனர். ஆனால், குடியரசு தினத்தன்று நடந்த உழும் வாகனங்களுடன் டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகளினால் ஆங்காங்கே வன்முறைச் செயல்கள் நடாத்தப்பட்டன. செங்கோட்டையில் பஞ்சாப்பின் தனி நாடு கோருபவர்கள் காலிஸ்தான் கொடியையும் ஏற்றினார்கள்.
அதன் பின்னர் விவசாயிகளின் போராட்டத்தில் களங்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியினரும் அதை வெவ்வேறு வழியில் பாவித்தும் வருகின்றனர். மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க-வைப் பொறுத்தவரை விவசாயிகள் மீது உண்டாகியிருக்கும் அவப்பெயரைப் பயன்படுத்தி அப்போராட்டங்களை நிறுத்துவதற்குரிய சகல நடவடிக்கைகளையும் செய்வது அவசியமாகியிருக்கிறது.
https://vetrinadai.com/news/india-farmers-protest/
அதேசமயம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அரசாங்கமாகவும் காட்டிக்கொள்ளவேண்டும். மூன்று சட்டங்களையும் வாபஸ் பெறாவிட்டால் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டோமென்று அடம்பிடிக்கும் விவசாயிகள் மீண்டும் டெல்லிக்குள் நுழையாமலிருக்க வீதிகளின் முக்கிய இடங்களைக் கடுமையான எல்லைகள் போட்டு முடக்கங்களை ஏற்படுத்தி வருகிறார்கள் பொலீசார்.
நுழையும் அனுமதி மறுக்கப்படும் வீதிகளில் ஆணிகளாலான பாய்கள் விரிக்கப்பட்டு அதையடுத்து வெவ்வேறு விதமான உயரமான, தாங்கமுடியான முட்டுக்கட்டைகள் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. போர்க்காலங்களில் ஸ்தாபிக்கப்படுவது போன்ற எல்லைகள் உண்டாக்கப்பட்டிருக்கின்றன.
பெப்ரவரி 06 அன்று மீண்டும் டெல்லியின் எல்லைகளை மறைத்து போடாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள் போராடும் விவசாயிகள்.
சாள்ஸ் ஜெ. போமன்