கொவிட் 19 தடுப்பு மருந்தை இணையத் தளங்களில் விற்பதாக விளம்பரங்கள் ஆரம்பித்துவிட்டன.

சர்வதேச அளவில் குற்றங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை விற்பதாக இணையத் தளங்களில் விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கின்றன. இருட்டான இணையம் என்று குறிப்பிடப்படும் “Dark Web” இல் கொவிட் 19 சம்பந்தப்பட்ட பல விதமான விளம்பரங்களைக் காணமுடிகிறது.

தடுப்பு மருந்து மட்டுமன்றி, தடுப்பு மருந்து பெற்றதற்கான போலிச் சான்றிதழ், தொற்று இல்லையென்று காட்டும் போலிச் சான்றிதழ்கள் போன்றவையும் விற்பனைக்கு இருப்பதாக விளம்பரங்கள் காணக்கிடக்கின்றன. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்து மனிதர்களிடம் பணம் பறிக்கும் ஏமாற்றுக்காரர்களே அவைகளின் பின்னால் இருப்பதாக Pharmaceutical Security Institute என்ற சர்வதேச ரீதியில் மருந்துகளின் உண்மைத்தனத்தைக் கண்காணிக்கும் அமைப்புச் சுட்டிக்காட்டுகிறது.

Pharmaceutical Security Institute உலகிலிருக்கும் 37 பெரிய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டுறவுடன் சர்வதேச குற்றக் கண்காணிக்கு அதிகாரங்கள், பொலீஸார், அரசாங்கத் திணைக்களங்களுடன் ஒன்றிணைந்து செயற்படும் ஒரு இலாபம் எதிர்பார்க்காத அமைப்பாகும். 

“அந்தந்தச் சந்தர்ப்பத்தில் உலகில் எதெதுக்குத் தேவைகளிருக்கின்றனவோ அவைகளுக்கேற்றபடி குற்றங்களிலேயே வாழும் அமைப்புக்கள் தமது விற்பனைப் பொருட்களை அமைக்கின்றன. இன்று பல காரணங்களுக்காகவும் கொவிட் 19 சம்பந்தப்பட்ட வெவ்வேறு விடயங்களை சிலர் குறுக்கு வழியில் பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். அவர்களிடம் பணபலமும் இருக்கிறது. எனவே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தில் பல பில்லியன்களைச் சம்பாதிக்கவே இப்படியான குழுக்கள் களத்தில் இறங்கியிருக்கின்றன,” என்கிறார் PTI அமைப்பின் சிசிலியா பாந்த்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *