ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் ஐந்து புதிய வரவுகள்.
நிரந்தரமான அங்கத்தவர்களை விட மேலும் பத்து அங்கத்தவர்களைக் கொண்டது ஐ.நா-வின் பாதுகாப்புச் சபை. அதில் ஐந்து பேர் மாற மேலும் புதிய ஐந்து பேர் 2021 இல் சேர்ந்துகொண்டார்கள். இந்தியா, அயர்லாந்து, மெக்ஸிகோ, கென்யா, நோர்வே ஆகியவையே அந்த ஐந்து நாடுகள்.
இப்புதிய அங்கத்தவர்கள் இரண்டு வருடங்கள் தமது இடத்திலிருப்பார்கள். கடந்த நாலு வருட டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் வெளிநாட்டுக் கொள்கைகளால் ஐ.நா-வின் பங்கு உலகளவில் ஓரங்கட்டப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. ‘அமெரிக்கா முதலிடத்தில்’ என்று தெளிவாகக் குறிப்பிட்டுத் தனது முடிவுகளை டிரம்ப் எடுத்து வந்திருந்ததால் இந்தப் பாதுகாப்புச் சபையும் பெரும்பாலும் தனது குரலை இழந்திருக்கிறது.
2000 முதல் 2010 இலான காலத்தில் பாதுகாப்புச் சபை அங்கத்தார்கள் 10 தடவை தமது அறுதிப் பெரும்பான்மை வாக்கை நுழைத்து ஒரு செயலைத் தடுத்திருக்கிறார்கள். 2010 -19 காலத்தில் அது 31 தடவைகள் நடந்திருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஐந்து தடவை அறுதிப் பெரும்பான்மை பாவிக்கப்பட்டிருக்கிறது என்பதே உலகம் இன்று என்றுமில்லாதது போலப் பிளவுபட்டிருக்கிறது என்பதற்கு அடையாளமாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்