பாராளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்டதைக் கண்டிக்கும் டிரம்ப்பிடமிருந்து கழன்று கொள்ளும் அமைச்சர்கள்.
புதனன்று வாஷிங்டனில் அமெரிக்கப் பாராளுமன்றத்துள் அத்துமீறிப் புகுந்து வன்முறையில் இறங்கியவர்களை “இது மன்னிக்க முடியாத குற்றம். சட்டத்துக்கு எதிராக நடந்தவர்களெல்லாரும் தண்டிக்கப்படுவார்கள்,” என்று டுவிட்டர் வீடியோ ஒன்றின் மூலம் சாடியிருக்கிறார் டிரம்ப்.
அத்துடன் “20 ம் திகதியன்று ஒரு புதிய ஜனாதிபதி நிர்வாகம் பதவியேற்க இருக்கிறது. அமைதியான ஒரு அதிகார மாற்றம் ஒன்றை உண்டாக்குவதற்காக உழைப்பதே இனிமேல் இருக்கும் எனது பதவி நாட்களின் எனது முக்கியமான நோக்கமாக இருக்கும்,” என்றும் டிரம்ப் குறிப்பிட்டிருக்கிறார்.
பாராளுமன்றக் கட்டடத் தாக்கலின் பின்னர் டிரம்ப், மெலனியா டிரம்ப் ஆகியோருடைய வெள்ளை மாளிகை உத்தியோகத்தவர்கள் பல தங்களுடைய ராஜினாமாவை கையளித்திருக்கிறார்கள். அத்துடன் டிரம்ப்பின் அமைச்சரவையில் நீண்டகாலம் பணியாற்றிய கல்வியமைச்சர், போக்குவரத்து அமைச்சர் ஆகிய இருவரும் பாராளுமன்றக் கட்டடத் தாக்குதல் கூட்டத்தைத் தூண்டிவிட்டுப் பேசிய டிரம்பைக் கண்டித்துப் பதவி விலகினார்கள்.
அதே சமயம் டிரம்ப்பைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கு அவரது கட்சியினர் ஆவன செய்யாவிட்டால் தாம் உச்ச நீதிமன்றத்தை (impeachment) அதற்காக நாடப்போவதாக டெமொகிரடிக் கட்சியினர் நெருக்கி வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்