அரசின் உதவித்தொகைகளில் தில்லுமுல்லுக் காரரைப்பிடிக்கப்போன நெதர்லாந்து அரசு பதவி விலகவேண்டியதாயிற்று

குழந்தைகளுள்ள குடும்பத்தினரிடையே அரசின் உதவித்தொகை ஏமாற்றுக்காரை மீது நடவடிக்கை எடுக்கப்போன நெதர்லாந்து அரசு, அவ்விசாரணைகளில் வரித்திணைக்களம் செய்த பல பிழைகளைப் பொறுப்பேற்றுப் பதவி விலகியது. நடந்த தவறுகள் பல்லாயிரக்கணக்கானோரைப் பாதித்திருக்கிறது.

வேலையிழப்புக்கள், சொத்துக்கள் இழப்பு, விவாகரத்துக்கள், பிள்ளைகளின் வாழ்க்கைகள் பாதிப்பு போன்றவைகள் அப்பிழைகளின் விளைவாகத் தனி மனிதர்களைப் பாதித்திருக்கிறது என்று அவைகளைப் பற்றி விசாரித்த குழுவின் அறிக்கை விபரிக்கிறது.

“சட்டம் ஒழுங்குகளால் இயக்கப்படும் ஒரு நாட்டில் மக்களை அந்த நாட்டின் அரசு பாதுகாக்கவேண்டும். இங்கே மிகப்பெரிய தவறுகள் பல ஆண்டுகளாக நடந்திருக்கின்றன,” என்று குறிப்பிட்ட நெதர்லாந்தின் பிரதமர் மார்க் ருத்த தனது அரசாங்கம் பதவி விலகுவதாகத் தெரிவித்தார். நெதர்லாந்தில் தேர்தல் நடக்க மேலும் இரண்டே மாதங்களிருப்பதால் மார்க் ருத்தயின் கூட்டரசு பதவியிலிருந்து விலகுவது பெரும் பாதிப்பை உண்டாக்காது என்று கருதப்படுகிறது.

வரித்திணைக்களத்தின் தவறுகளால் பாதிக்கப்பட்ட 20,000 குடும்பங்களுக்கு இழப்பை ஈடுசெய்வதற்காக அரசு சுமார் 500 மில்லியன் ஏவ்ரோக்களை ஒதுக்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *