வாக்குப்பெட்டிகளைக் கையாளும் நிறுவனங்களிரண்டு டொனால்ட் டிரம்ப் கூட்டாளிகள் மீது வழக்குத் தொடர்ந்திருக்கின்றன.
அமெரிக்கத் தேர்தலில் வாக்களிக்கும் இயந்திரங்களைத் தயாரிக்கும் டொமினியன், ஸ்மார்ட்மடிக் ஆகிய இரண்டும் டொனால்ட் டிரம்ப் வக்கீல்கள் ரூடி குலியானி, சிட்னி பவல் மற்றும் பொக்ஸ் நியூஸ் ஆகியவற்றின் மீது நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்திருக்கின்றன. அந்த ஊடகத்தில் நிகழ்ச்சிகள் நடாத்தும் மூன்று பேர் மேல் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புக்கள் மீது அவதூறு கூறியதாக அவ்வழக்குகள் குறிப்பிடுகின்றன.
ஸ்மார்ட்மடிக் நிறுவனத்தின் தயாரிப்புக்கள் தேர்தலில் ஆறு மாநிலங்களில் வாக்களிப்புத் தில்லுமுல்லுகளுக்குப் பாவிக்கப்பட்டதாக ஆகக்குறைந்தது ஒரு டசன் நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் “களவெடுக்கப்பட்ட தேர்தல்” என்ற பெயரில் தங்களது தயாரிப்புக்களைச் சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அதேவிதமான குற்றச்சாட்டுக்களுடன் டொமினியன் நிறுவனம் ஏற்கனவே அதே நபர்களிடம் சுமார் 2.7 பில்லியன் டொலர்கள் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்