எழுபது வருடங்களாக வெள்ளித்திரையில் தங்கக் காலடிகள் பதித்த கிரிஸ்தோபர் பிளம்மர் காலமானார்.

காலத்தில் அழியாத சினிமாக்களான ஸவுண்ட் ஒவ் மியூசிக், ஒதெல்லோ, கிங் லியர் போன்றவைகளால் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்த கனடாவைச் சேர்ந்த நடிகள் கிரிஸ்தோபர் பிளம்மர் தனது 91 வயதில் காலமானார்.

1953 ம் ஆண்டில் சினிமாக்களுக்குள் நுழைந்த பிளம்மர் அமெரிக்கா, கனடாவில் பல நாடகங்களிலும் நடித்தார். ஸவுண்ட் அப் மியூஸிக் 1965 இல் வெளிவந்தபோது உலகம் முழுவதும் அவரது பெயர் பேசப்பட்டது. அவரைப் பொறுத்தவரை அச்சினிமாவில் தன் கதாபாத்திரத்தால் அவர் பெரிதும் கவரப்படவில்லை. 

1999 தி இன்ஸைடர், 2001 இல் எ பியூட்டிபுல் மைண்ட், 2009 இல் த லாஸ்ட் ஸ்டேஷன் ஆகியவைகள் அவரது வயதான காலத்தில் பலரைக் கவரவைத்த சினிமாக்கள். 

தனது 82 வயதில் 2011 இல் (Beginners) பிளம்மர் ஒஸ்கார் பரிசைப் பெற்றபோது அப்பரிசைப் பெறும் அதிக வயதினர் என்று சரித்திரத்தில் கால் பதித்தார். மீண்டும் 2018 இல் ஓல் த மணி இன் த வேர்ல்ட் சினிமாவுக்காக அவர் ஒஸ்கார் பரிசுக்குப் போட்டியிட்டபோது அவ்வயதில் அப்பரிசுக்குப் போட்டியிட்ட முதியவர் என்ற பெயரையும் நிலைநாட்டிக்கொண்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *