சீனாவின் மேலுமொரு தடுப்பு மருந்து கொவிட் 19 ஐ எதிர்க்கப் பயன்படுகிறது.
சீன நிறுவனமான CanSino Biologics தனது தடுப்பு மருந்து 67.5% கொவிட் 19 க்கு எதிராகச் செயற்படுவதாக அறிவித்திருக்கிறது. சீனாவின் இராணுவம் ஒரு மருந்து ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்தத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துப் பரிசீலித்திருப்பதாகத் தெரிகிறது.
இதன் கடைசிக் கட்டப் பரிசீலனையில் 30,000 பேர் கலந்துகொண்டதாகவும் அவர்களுக்கு அம்மருந்து 90.98 % பலனைக் கொடுத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. அந்த மருந்து ஒரு ஊசியை மட்டுமே எடுத்தால் போதுமானது. சீனாவின் அரச நிறுவனமான National Biotec Group Co சினோபார்ம் என்ற தடுப்பு மருந்தையும், இன்னொரு நிறுவனமான சினோவாக் வேறொரு தடுப்பு மருந்தையும் ஏற்கனவே தயாரித்து வருகிறார்கள்.
கான்சினோ நிறுவனத்தின் தடுப்பு மருந்துகளின் பெரும்பாலான பரீட்சைகள் பாகிஸ்தானில் நடாத்தப்பட்டன. அவர்கள் அந்த மருந்தை 20 மில்லியன் வாங்கிக்கொள்ளவிருக்கிறார்கள். அதைத்தவிர மெக்ஸிகோ 35 மில்லியனை வாங்கிக்கொள்ளவிருக்கிறது. மலேசியா 3.5 மில்லியன் மருந்துகளை வாங்கவிருக்கிறது.
கான்சினோ நிறுவனம் ரஷ்யாவில் மேலுமொரு ஆராய்ச்சியை ஸ்புட்நிக் V நிறுவனத்துடன் சேர்ந்து நடாத்தத் திட்டமிட்டு வருகிறது. தனது ஸ்புட்னிக் V தயாரிப்பில் தடங்கல்களை எதிர்நோக்கிவரும் ரஷ்யாவுடன் கான்சினோ தனது மருந்தையும் சேர்த்துப் பாவிப்பது பற்றி யோசிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்