அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர்களாக இருந்தவர்களுள் முக்கியமான ஒருவர் மறைந்தார்.
ஜோர்ஜ் பி.ஷுல்ட்ஸ் 1982 – 1989 காலத்தில் ரொனால்ட் ரீகனின் அரசில் வெளிவிவகார அமைச்சராக இருந்தார். 100 வயதான அவர் கலிபோர்னியாவில் இறந்துவிட்டதாக அறிவ்க்கப்படுகிறது.
ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த ரிச்சார்ட் நிக்ஸனின் அரசாங்கத்தில் வர்த்தக – வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்தார். ரீகனின் அரசில் ஆறு வருடங்கள் வெளிவிவகார அமைச்சராகக் கடமையாற்றினார். அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நீண்ட காலமாகத் தங்களுக்குள் கொண்டிருந்த கடுமையான எதிர்ப்புக்களைச் சாமர்த்தியமாகக் கையாண்டது ஷுல்ட்ஸின் முக்கிய பெருமை எனலாம். 1987 இல் அவ்விரண்டு நாடுகளுக்குமிடையேயான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்துக்கு வித்திட்ட பெருமை ஷூல்ட்ஸையே சேரும். அன்றைய சோவியத் தலைவர் மிக்கேல் கொர்பச்சேவுடன் நட்புடன் பழகி மிகத் திறமையான இராஜதந்திரியாக இருந்த அவர் பின்னர் ஜோர்ஜ் புஷ்ஷின் அரசாங்கத்திற்கு ஆலோசகராகவும் இருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்