பாலுறவுக்கான சம்மதத்தைக் கொடுக்கும் வயதாக 15 ஐ தீர்மானிக்கவிருக்கிறது பிரான்ஸ்.
ஒருவர் எத்தனை வயதில் உடலுறவுக்கான சம்மதத்தை இன்னொருவருக்குக் கொடுக்கலாம் என்ற வயது வரம்பு இல்லாத நாடாக பிரான்ஸ் இருந்துவந்தது. அதனால் பாலியல் குற்றங்களுக்காகத் தண்டனை வழங்குவது நீண்டகாலமாகவே பிரச்சினையாக இருந்து வந்துள்ளது.
சிறு வயதில் ஒரு நபர் பாலியல் இச்சைக்கு இன்னொருவரிடம் பலியாகியிருந்தால் அந்த நபர் 48 வயதுவரை அதை வெளிப்படுத்தலாம் என்ற சட்டம் இருந்து வருகிறது. ஆனால், வயதுக்கு வந்த ஒருவர் எந்த வயதில் ஒரு வயது குறைந்தவருடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்ற எல்லையை பிரான்ஸ் சட்டம் தெளிவாகக் குறிப்பிடவில்லை. வயது வந்தவர் ஒருவர் 15 வயது வந்தவருடன் தான் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு, அதே நேரம் 15 க்கு முதலே ஒருவர் அதை அனுமதித்தால் உடலுறவு கொள்ளலாம் என்கிறது.
மூன்று வருடங்களுக்கு முன்னரே “மீ டூ” என்ற பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானவர்களின் குரல் கொடுக்கும் அலையால் இக்கேள்வி பிரான்ஸில் எழுப்பப்பட்டது. ஆனாலும், பல சட்டச் சிக்கல்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுக் கைவிடப்பட்டது. ஆனால், சமீப காலத்தில் சிறுவயதில் பாலியல் குற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டவர்களால் வெளியிடப்பட்ட பல வாக்குமூலங்களும், வழக்குகளும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் பிரான்ஸ் அரசு அந்த வயது எல்லையைத் தெளிவாக்கும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
“பதினைந்து வயதுக்குட்பட்டவருடன் ஒரு வயதுக்கு வந்தவர் உடலுறவு கொள்வது கற்பழிப்பு,” என்கிறார் பிரென்ச் நீதியமைச்சர் எரிக் டுபொன் – மொரெட்டி.
சாள்ஸ் ஜெ. போமன்