12-17 வயதினருக்குத் தடுப்பூசி பெற்றோர் அனுமதி அவசியம். அதற்கான பத்திரம் வெளியீடு.

பிரான்ஸில் 12 முதல் 17 வரையான பதின்ம வயதுப் பிரிவினருக்குத்தடுப்பூசி ஏற்றுவது நாளை ஜூன் 15 முதல் தொடங்குகிறது. தடுப்பூசி நிலையங்களுக்கு வருவோர் தங்கள் பெற்றோரது சம்மதத்தை நிரூபிக்கின்ற அனுமதிப் பத்திரத்தைச் சமர்பிக்க வேண்டும்.

பெற்றோரில் எவரேனும் ஒருவர் தடுப்பூசி நிலையத்துக்கு உடன்வருகை தர வேண்டும். பெற்றோர்கள் பூரணப்படுத்த வேண்டிய படிவத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கிறது. அதனை அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்(website of the Ministry of Health) பெற்றுக்கொள்ளலாம்.

பிள்ளைகளது சட்டரீதியான பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் அந்தப் படிவத்தை பூரணப்படுத்தி ஒப்பமிடவேண்டும். தாய், தந்தையர் தங்கள் பிள்ளையுடன் தடுப்பூசி நிலையத்துக்கு வருகை தந்தாலும் கூட அத்தாட்சிப் பத்திரத்தை ஒப்படைப்பது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் 12-18 வயதுப் பிரிவினருக்கு’பைஸர் – பயோஎன்ரெக்’ தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. அதனை அவர்கள் தடுப்பூசிநிலையங்களில் மாத்திரமே ஏற்றிக்கொள்ள முடியும்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *