2040 ம் ஆண்டுவரை உலகின் எரிநெய்யின் பெரும்பங்கைக் கொள்வனவு செய்யப்போகும் நாடு இந்தியாவாக இருக்கும்.
சர்வதேச எரிசக்தி அமைப்பின் (IEA) கணிப்பீட்டின்படி இந்தியாவின் எரிநெய்த் தேவை படுவேகமாக அதிகரித்து வரும் அதே சமயம் இந்தியாவின் சொந்த எரிநெய்த் தயாரிப்பின் அளவு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. எனவே வளைகுடா நாடுகளின் எரிபொருளை பெருமளவு கொள்வனவு செய்யும் நாடாக இந்தியா மாறும்.
கடந்து போன வருடங்களில் சீனாவின் தயாரிப்புக்களும், கொள்வனவும் அதிகரித்து வந்ததால் அது உலகின் பெரும்பகுதி எரிபொருளைக் கொள்வனவு செய்தது போன்று இந்தியா மாறவிருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதி அதிகரித்து 2040 இல் அது வருடத்துக்கு 8.6 திரில்லியன் பெறுமதியை அடையும் என்கிறது அந்த அறிக்கை.
தற்போது இருக்கும் அமெரிக்க – இஸ்ராயேலியக் கூட்டுறவும், சீனாவின் பிராந்தியப் பலத்தின் அடிப்படையும் இந்தியாவின் எரிநெய்த் தேவை, அதிகரிப்பு ஆகியவற்றால் மாற்றமடையும். தற்போது தனது 75 % எரிசக்திக்கு வெளி நாடுகளில் [பெரும்பாலும் வளைகுடா நாடுகளில்] தங்கியிருக்கும் இந்தியா 2040 இல் 90 % அதற்காகத் தங்கியிருக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்