Featured Articlesசெய்திகள்

210 மில்லியன் ஈரோ வென்ற சுவிஸ் அதிர்ஷ்டசாலி யார்?

ஈரோ மில்லியன் (Euro Millions) அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பில் பெரும் வெற்றிச் சாதனையாக 210 மில்லியன் ஈரோக்களை (230 மில்லியன் சுவிஸ் பிராங்) சுவிற்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் வென்றிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட சீட்டிழுப்பிலேயே ஜரோப்பாவின் அதி கூடிய அதிர்ஷ்டத் தொகை வெல்லப்பட்டிருக்கிறது.

6-12-22-29-33 இலக்கங்களும் 6,11ஆகிய இரு நற்சத்திர இலக்கங்களுமே வெற்றி எண்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
வெற்றியாளர் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று ஈரோ மில்லியன் லொத்தர் நிறுவனம் தெரிவித்திருக் கிறது. மேலதிக விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

கடந்த சில தடவைகள் வெல்லப்படாமல் இருந்துவந்த இந்தத் தொகையை எங்கே யார் வெல்லப்போகின்றார்கள் என்ற தீவிர எதிர்பார்ப்பு லொத்தர் உலகில் காணப்பட்டது.

கடைசியாக கடந்த டிசெம்பரில் பெரும் அதிர்ஷ்டத் தொகையான 200 மில்லியன் ஜக்பொட்டை பிரான்ஸின் தென் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வென்றி ருந்தார். அதற்கு முன்னர் பிரிட்டனில் இரண்டு தடவைகளும் (2012-2019) போர்த்துக்கல்(2014) , ஸ்பெயின்(2017) ஆகிய நாடுகளில் தலா ஒவ்வொரு தடவையும் 190 மில்லியன் ஈரோக்கள் வெல்லப்பட்டுள்ளன.

https://vetrinadai.com/news/200-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a/

2004 இல் ஈரோமில்லியன் லொத்தர் தொடங்கப்பட்ட பிறகு சுவிஸ் நாட்டில் வெல்லப்படுகின்ற பெருந்தொகை இதுவாகும். இதற்கு முன்னர் 2018, ஒக்ரோபரில் சுவிஸில் வசிக்கின்ற ஜேர்மனி நாட்டவர் ஒருவர் 183 மில்லியன் பிராங்குகளை வென்றி ருந்தார்.
——————————————————————
குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *