சுற்றுலாப் போகவேண்டாமென்று சகல திசைகளிலும் சிகப்பு விளக்கைப் போட்டிருக்கிறது பிரிட்டன்.
நாட்டின் பெருமளவு குடிமக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்ட பிரிட்டிஷ்காரர்கள் தமது நாடுகளுக்குச் சுற்றுலாவுக்கு வருவார்களென்று ஆவலுடன் எதிர்பார்த்த நாடுகளுக்கெல்லாம் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது பிரிட்டன். அதே போலவே கோடை விடுமுறைக்கு ஐரோப்பிய நாடுகளுக்காவது போகலாமென்று கனவுகண்ட பிரிட்டர்களுக்கும் ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறார் மட் ஹான்கொக்.
பிரிட்டர்களை வரவேற்க மால்டா, கிரீஸ், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் தயாராக இருப்பினும் கூட போர்த்துகாலை மட்டுமே தனது பச்சை விளக்கு நாடாக பிரிட்டன் வைத்திருக்கிறது. அதைத் தவிர்ந்த நாடுகளுக்குப் போய்விட்டு வருபவர்களெல்லாம் தொடர்ந்தும் பிரிட்டனில் முதலாம், எட்டாம் நாள் பரீட்சை செய்து பத்து நாட்கள் தம்மைத் தனிமைப்படுத்தவேண்டும்.
நேற்று போர்த்துக்காலில் ஒரு கொவிட் 19 இறப்பும், 724 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. எனவே போர்த்துக்காலையும் பிரிட்டன் தனது பச்சை விளக்கு நாடுகளின் பட்டியலிலிருந்து அகற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்