மற்றுமொரு சுதந்திர தேவி சிலை பாரிஸிலிருந்து நியூயோர்க்கிற்கு!
அமெரிக்காவுக்கு இரண்டாவது சுதந்திரச்சிலையை பிரான்ஸ் வழங்குகிறது. அமெரிக்காவின் சுதந்திர தினத்தைஒட்டி “லிற்றில் சிஸ்ரர்” (“little sister,”)எனப் பெயரிடப்பட்ட சிறிய வெண்கலத்தினாலான சுதந்திர சிலை பாரிஸில்இருந்து நியூயோர்க் செல்கிறது.
பாரிஸ் நகரில் அமைந்துள்ள சிறிய சுதந்திரப் பெண்ணின் சிலையேஅமெரிக்காவுக்குப் பரிசாக வழங்கப்படவுள்ளது.
நியூயோர்கில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சுதந்திர தேவியின் சிலையை(Statue of Liberty) 1886ஆம் ஆண்டு பிரான்ஸ் அமெரிக்காவுக்கு வழங்கி இருந்தது. சுமார் 151 அடி உயர்ந்த கம்பீரமான அந்த சுதந்திர தேவியின் வடிவத்தை ஒத்த சிறிய-பத்தடி உயரமுள்ள மற்றொரு சுதந்திரப் பெண் சிலை பாரிஸில் உள்ளது. நகரின் மூன்றாவது நிர்வாகப் பிரிவில் அமைந்துள்ள Conservatoire national des arts et métiers என்கின்ற கலை மற்றும் கைவினைக் கலைக்கல்லூரி முன்றலில்நிறுவப்பட்டுள்ள 450 கிலோ எடையுடைய அந்த வெண்கலச் சிலையே அமெரிக்காவுக்கு வழங்கப்படவுள்ளது.
கடந்த திங்களன்று அதன் அமைவிடத்தில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டசிலை வாகனம் மூலம் பிரான்ஸின் லூ ஹார்வ் (Havre) துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து கப்பலில் நியூயோர்க் செல்லவுள்ளது.
அமெரிக்கா – பிரான்ஸ் நட்புறவின்அடையாளமாக பிரான்ஸ் வழங்குகின்றஇந்த இரண்டாவது சிலை, பிரான்ஸின் சுதந்திர தினமாகிய ஜூலை 14 ஆம் திகதி நியூயார்கில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் வாயிலில் நிறுவப்படும். அதற்கு முன்பாக அது ஜூலை 4ஆம் திகதி அமெரிக்காவின் சுதந்திரதின நிகழ்விலும் காட்சிப்படுத்தப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.