நேபாளத்தில் கடும் மழையால் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளம் ஆகியவைகளில் 11 பேர் இறப்பு, 25 பேரைக் காணவில்லை.
ஒரு வாரமாகவே கடும் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் நேபாளத்தை அதன் பக்க விளைவுகளான மண்சரிவு, வெள்ளம் ஆகியவையும் சேர்ந்து தாக்குகின்றன. காட்மண்டுவை அடுத்துள்ள சிந்துபல்சௌக் பிராந்தியத்தில் அதன் விளைவுகள் மோசமாக இருக்கின்றன. பலர் வீடுகளை இழந்திருக்கிறார்கள், போக்குவர்த்துத் தொடர்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
மலைகளாலான அப்பகுதியில் வளர்ச்சித் திட்டமொன்றில் வேலைசெய்துவந்த ஒரு இந்தியரும், இரண்டு சீனர்களும் உட்படப் 11 பேர் இறந்திருக்கிறார்கள் என்று அறிவிக்கப்படுகிறது. சீன அரசின் நேபாளத்துக்கான நீர்வழங்கும் திட்டமொன்றில் அவர்கள் ஊழியர்களாக இருந்ததாகத் தெரிகிறது. சீனாவின் திபெத்தை அடுத்துள்ள அதே பிராந்தியத்தில் 25 பேரைக் காணவில்லையென்றும் அரசு தெரிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்