கொவிட் 19 கட்டுப்பாடுகள் போட்ட தொற்றுநோய் ஆராய்ச்சியாளரைக் கொல்லத் திட்டமிட்ட இராணுவ வீரனின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு பெல்ஜியத்தையும் சுற்றியுள்ள பிராந்தியங்களையும் திகிலுக்குள்ளாக்கியிருந்த இராணுவ வீரரின் இறந்த உடலை பெல்ஜியம் பொலீசார் கண்டெடுத்ததாக அறிவிக்கப்படுகிறது. இறப்புக்கான காரணம் தன்னைத் தானே சுட்டுக் கொன்றதாகத் தெரிவதாகச் சந்தேகப்பட்டாலும் சவப்பரிசோதனையின் மூலமே உண்மையான விபரங்களைத் தெரிந்துகொள்ளமுடியுமென்று பொலீசார் தெரிவிக்கிறார்கள்.
ஜோர்கன் கோனிங்ஸ் என்ற அந்த இராணுவ வீரன் அதிதீவிர வலதுசாரி இயக்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர் என்பது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயுதப் போராட்டங்களால் நாட்டின் நிலைப்பாட்டைத் தடுமாறவைக்கும் எண்ணமுள்ள அவ்வியக்கங்களின் தொடர்புகளிடையே அவர் தேடப்பட்டு வந்தார். ஆனால், நாட்டையடுத்துள்ள காடுகளுக்குள் மறைந்துவிட்ட அவரைத் தேடியும் நெதர்லாந்துடன் சேர்ந்து வலை விரிக்கப்பட்டது.
Dilserbos என்ற பெல்ஜியத்தின் கிழக்கிலுள்ள நகரொன்றில் கோனிங்ஸ் பல வருடங்கள் வாழ்ந்திருந்ததாகத் தெரிந்தது. எனவே அதையடுத்த காடுகளில் வெவ்வேறு பகுதிகளைப் பொலீசார் குறிவைத்துத் தேடிவந்தனர். அப்பகுதிக் காடுகளிடையே மிதிவண்டியில் போய்க்கொண்டிருந்த வேறொரு நகரத் தலைவர் அங்கிருந்து வந்த நாற்றத்தையடுத்துப் பற்றிப் பொலீசாரிடம் புகார் செய்ததையடுத்து நடந்த தேடலிலேயே கோனிங்ஸின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்