தெகிவல மிருகக்காட்சிசாலையில் இரண்டு சிங்கங்களுக்குக் கொரோனாத்தொற்று ஏற்பட்டிருக்கிறது.
கடந்த வாரம் தூர் என்ற பதினொரு வயதான ஆண் சிங்கம் கொவிட் 19 ஆல் பாவிக்கப்பட்டிருப்பதாக தெகிவல மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அறிவித்திருந்தது. அதையடுத்துப் பரிசோத்னைகள் நடத்தியதில் பனிரெண்டு வயதான ஷீனா என்ற மேலுமொரு சிங்கத்துக்கும் அது தொற்றியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.
எனவே இரண்டு சிங்கங்களையும் மற்றைய மிருகங்களிடமிருந்து தனியாகப் பிரித்துப் பாதுகாப்பில் வைத்திருக்கிறார்கள். மற்ற மிருங்களுக்கும் அத்தொற்றுப் பரவக்கூடாது என்ற எண்ணத்திலேயே அவை தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவம் செய்யப்பட்டு வருகின்றன.
இதேபோன்று உலகின் வேறு மிருகக்காட்சிசாலைகளிலும் மிருகங்கள் மனிதர்களிடமிருந்து கொரோனாத்தொற்றுக்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. தூர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு எவ்வித உணவும் சாப்பிடாமலிருந்தது.
அதற்குத் தேவையான மருத்துவம் பற்றிய ஆலோசனைகள் இந்தியாவின் மிருக்க்காட்சிசாலை அதிகாரத்திடமிருந்து பெறப்படுகின்றன. இந்திய மிருகக்காட்சிசாலையிலும் அது மிருகங்களுக்குத் தொற்றியிருந்தது. சென்னையில் 12 வயதான சிங்கமொன்று கொவிட் 19 ஆல் சமீபத்தில் உயிரிழந்தது. அதைத் தவிர ஒன்பது சிங்கங்கள் அறிஞர் அண்ணா மிருகக்காட்சி சாலையில் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்