உசேய்ன் போல்ட் என்ற பெயரை விட வேகமாக எரியன் நைட்டன் பெயரை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்!
அமெரிக்காவைச் சேர்ந்த பதினேழு வயதான எரியன் நைட்டன் 100, 200 மீற்றர் ஓட்டப்பந்தயங்களில் ஒரு புயலாக நுழைந்திருக்கிறார். உசேய்ன் போல்ட் பொறித்து வைந்திருந்த சாதனைகளை ஒவ்வொன்றாக உடைத்து வருகிறார் எரியன் நைட்டன். ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான அமெரிக்காவின் நுழைவுப் போட்டியில் உசேய்ன் போல்ட்டின் 200 மீற்றர் சாதனையை முறியடித்திருக்கிறார் எரியன் நைட்டன்.
பதினேழு வயது மின்னல் நைட்டன் 200 மீற்றர் தூரத்தை ஓடி முடிக்க எடுத்த நேரம் 19.88 ஆகும். அது ஏற்கனவே இருபது வயதானவர்கள் ஓட எடுத்த நேரத்தை விட வினாடியின் 500 இல் ஒரு பகுதி குறைவானதாகும். அதன் மூலம் தற்போதைய உலக சாதனையாளர் நோவா லயஸை வீழ்த்தியிருக்கிறார். அவர் மே மாதத்திலேயே 18 வயதில் உசேய்ன் போல்ட் ஓடிய நேரத்தைவிடக் குறைவான நேரத்தில் ஓடியிருந்தார்.
அமெரிக்க புட்போல் விளையாட்டிலும் மிகத் திறமையானவரான நைட்டனுக்கு உபயகாரராக பல அமெரிக்க பல்கலைக்கழகங்களும் தயாராயிருந்தன. ஆனால், அவர் வேகமாக ஓடுவதில் தனது கவனத்தைச் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்