“ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, நான் தடுப்பு மருந்து போட்டுக்கொள்ளமாட்டேன்,” யோகான் பிளேக்

இரட்டைத் தங்கப் பதங்கங்களை வென்றிருக்கும் ஜமேக்காவின் ஓட்டப்பந்தய வீரர் தான் கொவிட் 19 தடுப்பு மருந்து போட்டுக்கொள்ளக் காரணமிருப்பதாகவும், அதனால் ஜப்பானில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குபற்ற முடியாவிட்டலும்கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேனென்கிறார்.

என்ன காரணத்துக்காக என்று விளக்கம் கொடுக்காத யோகான் பிளேக் “உனது நம்பிக்கைக்கு ஒப்பான முடிவுகளை நீயே எடுத்துக்கொள், உனக்காக மற்றவர்கள் முடிவுகளை எடுக்க அனுமதிக்காதே,” என்று டுவீட்டினார். 4 x 100 பந்தயங்களில் 2012, 2016 களில் உஸெய்ன் போல்ட்டுடன் சேர்ந்து வென்றவர் இவர்.

அடுத்த வாரம் ஜமேக்காவுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்துகள் கிடைக்கவிருக்கின்றன. ஜப்பானில் போட்டிகளில் பங்குகொள்ள தடுப்பு மருந்து எடுத்திருக்கவேண்டுமென்பது கட்டாயமல்ல. ஆனாலும், அதைச் செய்துகொள்ளும்படி ஒலிம்பிக்ஸ் போட்டி நடத்துனர்கள் பங்கெடுக்கும் வீரர்களிடம் கேட்டுக்கொள்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *