வெம்மை அலை கனடாவின் வான்கூவரை வாட்டியதில் இறந்தவர்கள் தொகை 69.
வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் தீடீர் இறப்புக்களால் 69 பேர் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது கனடாவின் வான்கூவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களாகும். பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியம் – முக்கியமாக வான்கூவர் – கடந்த மூன்று நாட்களாகக் கடும் வெப்பநிலையைச் சந்தித்து வருகிறது.
இதுவரை என்றுமே கனடாவில் வெப்பம் 45 செல்சியஸைத் தாண்டியதில்லை. கடந்த வாரம் முதல் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வெப்பம் அந்த எல்லையைத் தாண்டியிருக்கிறது. 49.5 செல்சியஸ் லைட்டன் நகரில் அளக்கப்பட்டிருக்கிறது.
“நாம் இதுவரை பனிச் சூறாவளி, கடும் குளிர் அலை போன்றவைகளைத்தான் சந்தித்திருக்கிறோம் ஆனால், தினசரி 47 செல்சியஸ் என்பதைக் கண்டதில்லை,” என்கிறார்கள் அப்பகுதிகளில் வாழ்பவர்கள். பல பிராந்தியங்களின் வானிலை அறிக்கை மக்களை வெளியே அதிகம் போவதைக் குறைத்துக்கொள்ளும்பவி எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவின் போர்ட்லாண்ட், சியாட்டில், ஒரேகன் ஆகிய பகுதிகளிலும் வெம்மை மிகக் கடுமையாக இருந்தது. ஆனால், அது படிப்படியாகக் குறைந்திருப்பதாகத் தெரிகிறது.
ஜனாதிபதி ஜோ பைடனும் ஏற்பட்டிருக்கும் வெம்மை அலை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயம் மனித நடவடிக்கைகளா, பூமியின் காலநிலையில் ஏற்பட்டுவரும் மாற்றம் பற்றி மறுப்பவர்களுக்கு நக்கலாக “கவலைப்படாதீர்கள் உலகம் வெம்மையாகவில்லை. அது வெறும் கற்பனைதான்,” என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா, கனடாவின் பகுதிகளில் அரசு வெம்மையால் தாக்கப்படுகிறவர்களுக்கான தற்காலிகப் புகலிடங்களைத் திறந்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்