அழகு நிறைந்த கடற்கரை| எங்கள் பருத்தித்துறை.
மாதங்கள் பலவாயிற்று வெற்றிநடை இணையத்தளம் மூலம் நாம் பயணங்கள் பற்றிய நிகழ்ச்சியை ஆரம்பித்து.
எனது வாழ்வின் பிறப்பு முனையும் இலங்கையின் அதி வடக்கிலிருக்கும் முனையான பருத்தித்துறையின் ஒரு பகுதியே. எனவே, வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு எனது ஊருக்கே பயணியாகப் போகும்போது போட்டுக்கொள்ளும் கண்ணாடியுடன் இந்த நிகழ்ச்சியை பருத்தித்துறைப் பக்கத்தைத் தன்னூராகக் கொண்ட யோகா தினேஷுடன் இணைந்து செய்திருக்கிறேன்.
ஆம், எங்கள் பருத்தித்துறை கூட ஒரு கவர்ச்சியான சுற்றுலா நகராக்கப்படலாம். நிகழ்ச்சிக்குள் வந்து பாருங்களேன்…..