சுற்றுலாப் பயணிகள் சம்பந்தப்பட்ட கட்டணங்களை உயர்த்தியிருக்கிறது சிறீலங்கா.

ஒரு பக்கத்தில் சர்வதேசச் சுற்றுலாப் பயணிக்களின் எண்ணிக்கையைப் பெருக்கவேண்டும் என்று கூறி நடவடிக்கைகளை எடுத்து வரும் சிறீலங்கா அவர்களுக்கான விசா உட்பட்ட கட்டணங்களை உயர்த்தும் முடிவை எடுத்திருக்கிறது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின்படி டிசம்பர் 01 திகதியிலிருந்து நாட்டின் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் சார்பில் பல கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன.

இணையத்தளம் மூலம் விசா பெறும் கட்டணம் தனியாருக்கு 50 டொலர்களாகவும் நிறுவனங்களுக்கு 55 டொலர்களாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன. விமான நிலையத்தில் வந்து விசாவைப் பெறுபவர்களுக்கான கட்டணம் 60 ஆகும்.

My Dream Home Visa என்ற வயதானவர்களுக்கான நீண்டகால விசாவுக்கான கட்டணம் 200 டொலர்கள்.

இரட்டைக் குடியுரிமைக்கான கட்டணம் 2,000 டொலர்கள். இரட்டைக் குடியுரிமை உள்ளவரின் துணை மற்றும் 22 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளுக்கு இரட்டைக் குடியுரிமைக்கான கட்டணம் 500 டொலர்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *