நாடுகளுக்கிடையேயான கால்பந்து விளையாட்டில் தொடர்ந்து பல தடவைகள் தோல்வியின்றி இத்தாலி சாதனை.
ஞாயிறன்று [05.09] சுவிஸுடன் கால்பந்து விளையாட்டில் மோதியது இத்தாலி. சுவிஸ் தவறாக விளையாடியதால் தனக்குக் கிடைத்த தண்ட உதையால் வலைக்குள் பந்தை அடிக்க யோரின்யோ [Jorginho] தவறியதால் அது 0 – 0 என்று எவருக்கும் வெற்றியின்றி அப்போட்டி முடிந்தது.
ஆயினும் கூட இத்தாலியக் கால்பந்தாட்டக் குழு அதன் மூலம் 36 மோதல்களில் தொடர்ந்து தோல்வியின்றி விளையாடிய அணி என்ற சாதனையைச் செய்தது. அதற்கு முன்னர் ஸ்பெய்ன், பிரேசில் நாட்டு அணிகள் 35 தடவைகள் தோல்வியின்றி விளையாடியிருக்கின்றன. 1993 – 1996 வருட இடைவெளிக்குள் பிரேசில் அச்சாதனையைச் செய்ய, ஸ்பெயின் 2009 இல் அதைத் தானும் நிறைவேற்றியது.
2022 உலகக் கோப்பைக்கு விளையாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான மோதல் ஞாயிறன்று நடைபெற்றது. அதற்கு முதல் வியாளனன்றும் அதே காரணத்துக்காக பல்கேரியாவுடன் மோதியதில் இத்தாலி 1-1 என்ற முடிவை அடைந்தது. ஜூலையில் நடந்த ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் முதலிடத்தைப் பெற்ற இத்தாலி மோதிய முதலாவது மோதல் அதுவாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்