டென்னிஸ் வானில் 20 வயதுக்குட்பட்ட இருவர் 1999 க்குப் பின்னர் முதல் தடவையாக எல்லோரையும் அசரவைக்கிறார்கள்.
அமெரிக்காவின் US Open final டென்னிஸ் பந்ததயத்தின் இறுதிப் போட்டியில் 19 வயதான கனடாவைச் சேர்ந்த லைலா பெர்னாண்டஸ் அதே நாட்டில் பிறந்து பிரிட்டனில் வாழும் 18 வயதான எம்மா ரடுகானுவுடன் மோதவிருக்கிறார். 1999 க்குப் பின்னர் இவ்வயதுள்ள இருவர் அக்கடைசிப் பந்தயத்தில் இதுவரை மோதிக்கொண்டதில்லை.
தற்போது உலகின் இரண்டாவது இடத்திலிருக்கும் அரீனா சபலென்காவை வென்ற லைலா பெர்னாண்டஸ் “இரத்தம், வியர்வை, கண்ணீர் ஆகியவையுடன் நான் இந்த வெற்றியைப் பெற்றேன்,” என்று கண்ணீருடன் தனது வெற்றியைப் பற்றிக் குறிப்பிட்டார். லைலாவுடன் விளையாடும்போது சபலென்கா கோபத்துடன் தனது இரண்டு டென்னில் மட்டைகளை உடைத்தெறிந்தார்.
எம்மாவைப் பொறுத்தவரை அந்தப் போட்டியிடத்துக்கு 44 வருடங்களுக்குப் பின்னர் வரும் முதலாவது பிரிட்டிஷ் பெண் அவராகும். உலகின் 17 இடத்திலிருக்கும் மரியா சக்காரியை வென்று இறுதிப் போட்டியில் பங்குபற்றவிருக்கிறார். British Grand Slam கடைசிப் போட்டிக்கு 62 வருடங்களுக்குப் பின்னர் வந்திருக்கும் இளவயதினர் என்ற பெருமையையும் பெறுகிறார் எம்மா.
இவர்களிருவரும் சனியன்று இரவு மோதவிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்